சென்னை அணியில் இணையும் முக்கிய வீரர் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

faf du plessis chennaisuperkings ipl2022
By Petchi Avudaiappan Dec 03, 2021 08:02 PM GMT
Report

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது சென்னை அணி oரு வீரரை மீண்டும் அணிக்குள் எடுக்கும் என அந்த அணியின் நிர்வாக இயக்குனர் காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார். 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. 

சென்னை அணியில் இணையும் முக்கிய வீரர் - மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Kasi Viswanathan Wants Faf To Pick Csk

இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

அதன்படி சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மகேந்திரசிங் தோனி (12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 

ஆனால்  மொய்ன் அலிக்கு பதிலாக டூபிளசியை தக்க வைத்திருக்கலாம் என சென்னை ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை அணி மெகா ஏலத்தின் போது நிச்சயம் டூபிளெஸ்ஸியை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும்.

ஏனெனில் இரண்டு முறை சென்னை அணியை அவர் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி எப்போதுமே சென்னை அணிக்காக முக்கிய வீரராக அவர் இருந்து வந்துள்ளார். எனவே நிச்சயம் நாங்கள் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சிப்போம் என சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.