ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ மழை - மேக வெடிப்பில் சிக்கி 60 பேர் பலி!
ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர்.
மேகவெடிப்பு
ஜம்மு-காஷ்மீர், கிஷ்துவார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. அதில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பெய்தது.
இதனால் சோஷ்டி கிராமத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 16 குடியிருப்புகள், அரசு கட்டடங்கள், 3 கோயில்கள், 30 மீட்டர் அளவிலான மேம்பாலம், வாகனங்கள், மற்றும் ஒரு பாதுகாப்புப் படை முகாம் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
60 பேர் பலி
பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 60 பேர் உயிரிழந்தனர். 30க்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மசாயில் மாதா யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல் IBC Tamil
