குஜராத்தை விட காஷ்மீர் மோசமடையவில்லை: முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி காட்டம்!

kashmir mehboobamufti
By Irumporai Jul 12, 2021 10:46 AM GMT
Report

தொழில்துறை முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பில் குஜராத்தை விட ஜம்முகாஷ்மீர் மோசமடைந்துவிடவில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.

   ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களிடபேசிய முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறை திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என கூறினார்.

மேலும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இங்குள்ள மின்சாரமும், நீரும் வெளி மாநில மக்களுக்கும் வழங்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் பொருளாதார சீற்றமும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்படவில்லை.

இன்னம் சொல்லப்போனால் முந்தைய ஆட்சியிலிருந்து பொருளாதார தாக்கம் ஏற்பட்டிருந்தால், ஜம்மு-காஷ்மீர் தற்போது குஜராத்தை விட மோசமான நிலையை அடைந்திருக்கும் என்று கூறினார்.