காஷ்மீரில் நில நடுக்கத்தில் சிக்கிய லியோ படக்குழுக்கு ? - தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்

Vijay Lokesh Kanagaraj
By Irumporai Mar 22, 2023 07:35 AM GMT
Report

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வினால் தங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என லியோ படக்குழு தெரிவித்துள்ளது.

லியோ படக்குழு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. வரும் ஆயுத பூஜைக்கு இந்த படம் வெளியாக உள்ளதாக கூற்ப்படும் நிலையில் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வட மாநிலங்களில் நேற்று கடும் நில அதிர்வு உணரப்பட்டது சுமார் ஒரு நிமிடம் நீடித்த இந்த அதிர்வு மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியது.

பாதுகாப்பாக இருக்கிறோம்  

அதோடு இந்த நிலையில் காஷ்மீரில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்று வடிவேல் நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் உள்ள நகைச்சுவை காட்சியினை பதிவிட்டிருந்தனர் .

காஷ்மீரில் நில நடுக்கத்தில் சிக்கிய லியோ படக்குழுக்கு ? - தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட் | Kashmir Earthquake Vijay Lokesh Leyo Team Update

இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றே காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலை திடீரென ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் இந்தியா உள்பட பல நாடுகளில் எதிரொலித்தது. குறிப்பாக டெல்லி, காஷ்மீர், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது