காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் : பிரதமர் அறிவுறுத்தல்

BJP Narendra Modi
By Irumporai Jan 17, 2023 06:03 AM GMT
Report

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி

டெல்லியில் நேற்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் , காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் : பிரதமர் அறிவுறுத்தல் | Kashi Tamil Sangam Should Be Held Pm

  கலாச்சார நிகழ்ச்சி நடத்தவேண்டும்

மேலும் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். நாட்டின் நிகழ்ச்சிகள் மூலம் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகத்தை மாநிலங்கள் பரிமாற்றம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.