காசி தமிழ் சங்கமம் : இன்றுடன் நிறைவு

By Irumporai Dec 16, 2022 02:41 AM GMT
Report

காசி தமிழ் சங்கமம் நிகழ்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

காசி தமிழ் சங்கமம்

கடந்த 19-ஆம் தேதி, உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.  

இன்று நிறைவு

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஐஐடி இணைந்து நடத்தும், காசிக்கும் தமிழுக்கும் உள்ள பழமையான தொடர்பை உணர்த்தும் வகையில் நடத்தப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம் : இன்றுடன் நிறைவு | Kashi Tamil Sangam Completed

இந்த விழா இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும், அவருடன் தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் ஆகியோர் இன்று பங்கேற்கின்றனர்.