பகவத்கீதை மீது சத்தியம்.. அமெரிக்காவின் புதிய எப்.பி.ஐ. இயக்குநர்- காஷ் படேல் யார்?
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா
அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
அதன்படி,நேற்று அமெரிக்க செனட் சபையில் 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் காஷ் படேல் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை மீது சத்தியம் செய்தபடி காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராகப் பதவியேற்றுக் கொண்டார்.
காஷ் படேல்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,’’நான் அமெரிக்கக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உலகின் மிகப் பெரிய தேசத்தின் சட்ட அமலாக்க முகமைக்குத் தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள்.
அது வேறெங்கும் நடக்காது. எப்.பி.ஐ-க்குள்ளும் அதற்கு வெளிரயும் பொறுப்பு இருக்கும் என உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.