அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? சர்க்கரை நோயாளிகளுக்கான கஷாயம்
நீரிழிவு நோய் தாக்குபவர்களுக்கு உண்டாகும் ஆபத்துகளில் சிறுநீரக செயலிழப்பும் ஒன்று.
உடலில் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை சக்தியாக பயன்படுவதற்கு இன்சுலின் பங்கு அவசியம். ரத்தத்தில் சர்க்கரை சீராக இருக்கும் வரை இதில் பிரச்சனையில்லை.
இன்சுலின் அளவு குறைந்து ரத்தத்தில் அதிகமாக சர்க்கரை சேரும் போது அதை சிறுநீரகங்கள் தான் வடிகட்டுகிறது. அதிகபடியான சர்க்கரையை சிறுநீரகம் வடிகட்டிகொண்டே இருக்கிறது.
ஒரு கட்டத்தில் சிறுநீரகம் தண்ணீர் பற்றாக்குறை உண்டாகும் போது தனது பணியை இழந்து உடலில் இருக்கும் தண்ணீரையும் தாதுக்களையும் வெளியேற்ற தொடங்கும். இதனால் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் தாகம் அதிகரிக்கும்.
எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுக்கும் அற்புத கஷாயம் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கடல் அழிஞ்சில். - 15 கிராம்
பருத்தி விதை. - 15 கிராம்
செய்முறை
முதலில் கடல் அழிஞ்சில் மற்றும் பருத்தி விதை ஆகியவற்றை எடுத்து சுத்தப்படுத்திய பின், இரண்டையும் ஒன்றாக சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் இடித்து வைத்துள்ளவற்றைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதிக்க வைத்து 400 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி குடிக்கவும்.
காலை மற்றும் மாலை வேளையில் தலா 200 மி.லி வீதம் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் பலனை தரும்.
you may like this video