இஸ்லாமிய சிறுமியை தூக்கி தரையில் அடித்த நபர் - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வைரல்...!

Viral Video Kerala
By Nandhini Nov 18, 2022 05:59 AM GMT
Report

கேரளாவில் இஸ்லாமிய சிறுமியை ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய சிறுமியை தூக்கி தரையில் அடித்த நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கேரளா மாநிலம், காசர்கோடில் சாலையில் ஒரு இஸ்லாமிய சிறுமி நின்றுக்கொண்டிருக்கிறாள்.

அப்போது அங்கு வந்த அபூபக்கர் சித்திக் என்ற நபர் அச்சிறுமியை அப்படியே தூக்கி தரையில் அடித்தார். இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த நபருக்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். 

kasargod-kerala-girl-attack-viral-video