கரூர் மாவட்டம் - வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது
கரூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி காலை 7 மணி முதல் பொது மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு செலுத்தும் பணி காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது.
காலை முதலே பொதுமக்கள், இளைஞர்கள் என ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சி உள்ள 48 வார்டில், ஒரு வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மீதம் உள்ள 47 வார்டுகளுக்கு, 187 வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
அதேபோல் 3 நகராட்சி 8 பேரூராட்சிகள் மொத்தம் 211 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது கரூர் மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 398 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு
அதற்கான பள்ளிகளில் வாக்குச்சாவடியில் ஆண் பெண் என தனித்தனியாக சுவற்றில் வரையப்பட்டு பொதுமக்கள் சமூக இடைவெளி வாக்களிப்பதற்காக வட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 92 பதற்றமான வாக்குச்சாவடிகளில் அங்கு கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் சாலைகளில் 200 மீட்டர் என வரையப்பட்டுள்ளது. அதேபோல் வாக்குப் பதிவு செய்யும் மையத்தில் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தலில் 100% வாக்களிப்பு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க பல்வேறு விழிப்புணர்வு சுவரொட்டிகளும் வாக்குச்சாவடி மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் 1,960 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.