கரூரில் ஷூட்டிங் நடந்ததா? ஜனநாயகன் பட பாடலில் இடம்பெற்ற அந்த காட்சி!
கரூரில் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஜனநாயகன்
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இந்தப் படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் விஜய்யின் அரசியல் வரவை முன் வைக்கும் வகையில் சில வரிகள் இடம்பெற்றுள்ளன.
கரூரில் ஷூட்டிங்?
மேலும், விஜய் மக்கள் முன்பாக பிரச்சார வாகனத்தில் இருந்து பிரச்சாரம் செய்வது போல் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், அளித்துள்ள பேட்டி ஒன்றில், கரூரில் அனுமதியின்றி ஜனநாயகன் ஷூட்டிங் நடத்தப்பட்டதாகவும்,
கரூர் பிரச்சாரத்தின் போது அதிநவீன ட்ரோன் கேமரா இருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.