இதுக்கெல்லாம் கொலையா? டூவீலருக்கு வழிவிடாத டிராக்டர் - ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை!
கரூரில், மணல் அள்ளி சென்ற டிராக்டர் டூ விலருக்கு வழி விடாததால் ஏற்பட்ட பிரச்சினையின் விளைவாக இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சிமெண்ட் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் நடைபெறும் பணிக்காக டிராக்டரில் மணல் அள்ளிச் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ராஜா, பிரபாகரன் என்ற இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில், மணல் அள்ளி செல்லும் டிராக்டருக்கு பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த இளைஞர்கள் விடாமல் ஹாரன் அடித்து வழி கேட்டுள்ளனர். டிராக்டர் ஓட்டிய டிரைவர் இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாமல் மெத்தனமாக இருந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு உச்சமடைந்த போது, பிரபு என்பவர் செந்திலுக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்து, சமாதானமும் செய்தார்.
இந்த நிலையில், இன்று காலை பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களும், மணவாசி தர்மதுரை ஆதரவாளர்களான 25க்கும் மேற்பட்டோரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்தரப்பினர், சற்றும் எதிர்ப்பார்க்காத விதமாக, மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி, உள்ளிட்டவற்றால் பிரபு தலை மற்றும் உடலில் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில்
மிதந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.