''ஆட்சியருக்கு கண்டனம் '' - ஜோதிமணி எம்.பி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம்

jothimani districtcollector intensified karurmp
By Irumporai Nov 26, 2021 05:32 AM GMT
Report

கடந்த அதிமுக ஆட்சியில் கரூர் எம்.பி. ஜோதிமணி என்றாலே அரசாங்கத்தோடு முட்டல் மோதல்தான் என இருந்தது. இப்போது காங்கிரசின் தோழமைக் கட்சி ஆட்சியிலும் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தியது, மாவட்டத்தைத் தாண்டி கவனத்தை ஈர்த்ததுள்ளது.

நேற்று மதியம் 12 மணிவாக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த கரூர் எம்.பி. ஜோதிமணிதிடீரென தரையில் அமர்ந்தார்.

கரூரில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்தவில்லை என குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று, அவரை சமாதானப்படுத்தினார். விரைவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான முகாம்கள் நடத்தப்படுமென உறுதியளித்தார். இந்த நிலையில், கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் மீது புகார்களை முன்வைத்து, தலைமைச் செயலர் இறையன்புவிற்கு எம்.பி. ஜோதிமணி புகார் மனு அனுப்பியுள்ளார்.

மேலும், கரூர் ஆட்சியர் பிரபுசங்கரின் மேசையிலிருந்து இரண்டு சதவிகிதம் வரை கட்டாய வசூல் முடிந்த பிறகுதான் கோப்புகள் நகரும் என்று மக்கள் மத்தியில் பரவலாக கருத்து நிலவுவதாக ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். கரூர்‌ ஆட்சியர்‌ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் அவர் கோரியுள்ளார்.

மேலும், 10 மணி நேரத்தை கடந்தும் எம் பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டம் தற்போது 2 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் "வாய்மையே வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.