வீடு இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உயிரிழப்பு

Death
By Thahir Nov 29, 2022 06:42 AM GMT
Report

கரூர் அருகே பழமையான வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உயிரிழந்தார். 

வீடு இடிந்து விழுந்து விபத்து - மூதாட்டி உயிரிழப்பு 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 70 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது இந்த வீட்டில் பாத்திமா பீவி என்ற 74 வயதான மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார்.இந்த நிலையில் இன்று காலை வீடு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

karur-house-collapse-the-old-woman-death

வீடு இடிந்து விழுந்த போது வீட்டில் மூதாட்டி பாத்திமா பீவி இடிபாடுகளில் சிக்கியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 2 பொக்லைன் வாகன உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ள மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மூதாட்டி பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.