கரூர் அரசு பணி! மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை

Karur
By Fathima Aug 14, 2026 07:24 AM GMT
Report

கரூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது, இதனை விசாரித்த மதுரைக்கிளை வேலை வழங்குவதற்கான உத்தரவை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது, இன்றைய தினம் விசாரணைக்கு வந்த நிலையில் மதுரை கிளையினுடைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

கரூர் அரசு பணி! மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை | Karur Government Job Cancellation Updates