போங்க தம்பி..போங்க பள்ளிக்கு போங்க...மாணவனை கலாய்த்த கலெக்டர்
விடுமுறை கேட்ட மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் மழை குறைந்து விட்டது பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி என்று பதில் அளித்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
தொடர் கன மழையால் பள்ளி,கல்லுாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை வழங்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது மழை குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளி,கல்லுாரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லுாரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து மாணவன் ஒருவர் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிக்கு விடுமுறை வழங்குமாறு ட்விட்டரில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவனுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தற்போது மழை குறைந்துவிட்டது.
பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி. நண்பர்களையும் கிளம்பச் சொல்லுங்க. நிறைய படிக்க வேண்டி இருக்கு என்று பதில் அளித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.