ரயில் நிலையத்தில் இருந்த மாற்றுதிறனாளிகளை திடீரென கைது செய்த போலீசார்..
சென்னை கோட்டையை முற்றுகையிட செல்வதற்காக ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த மாற்றுதிறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாள் கோரிக்கையான மாதம் தோறும் 3000 உதவித்தொகை வழங்கவேண்டுமென்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி நாளை சென்னை கோட்டையில் ஆர்ப்பாட்டம் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில்,
தமிழகம் முழுவதிலிருந்தும் இன்று பல்வேறு மாவட்டங்களில் ரயில் மூலம் மாற்றுத்திறனாளிகள் செல்லவிருந்த நிலையில்,
கரூர் ரயில் நிலையத்தில் இருந்து 22 மாற்றுத்திறனாளிகள் செல்ல இருந்தனர் இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மாற்றுத்திறனாளிகள் இடம் சுமார் அரை மணி நேரம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து 22 மாற்றுத்திறனாளிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைப்பதற்காக கரூர் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதனால் கரூர் ரயில் நிலையத்தில் சுமார் 1மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று இரவு 09.05 மணிக்கு பாலக்காட்டில் இருந்து சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் ஏற வந்த நிலையில், 22 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.