கரூரில் மேலும் ஒரு மாணவி துாக்கிட்டு தற்கொலை
கரூரில் நேற்று முன்தினம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த மாவட்டத்தை பெரும் அதிர்ச்சிகுள்ளாகி இருக்கிறது.
கரூர் அருகில் உள்ள விவிஜி நகரை சேர்ந்தவர் மோகன் வீட்டிலேயே டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கான துணிமணிகளை தைத்துக் கொடுத்து தொழில் செய்து வருகிறார்.இவரது மகள் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வெங்கமேடு காவல் நிலையப் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் மறையும் முன்னரே மேலும் ஒரு கல்லூரி மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட
சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.