கரூர் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டம் கடந்த 1995 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகியவை இதன் எல்லைகளாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மேலும் கரூர் மாநகராட்சியும், குளித்தலை, புகளூர், பள்ளப்பட்டி என 3 நகராட்சிகளும், 8 பேரூராட்சிகளும் உள்ளது.
தங்கவேல் ஐஏஎஸ்
தங்கவேல் ஐஏஎஸ் கடந்த 18.10.2023 அன்று 19வது கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். முன்னதாக விழுப்புரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், சேலம் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர், திருவாரூர் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை சுகாதாரத்துறை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகம்,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கான (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டங்கள்) இணை நிர்வாக இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.
அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளதால் மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்ப்பது, கள ஆய்வு செய்வது என சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
பிரபுசங்கர் ஐஏஎஸ்
மதுரை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ள இவர் 2013 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 7வது இடம் பிடித்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் துணை ஆட்சியராக பணியாற்றிய போது, கொத்தடிமையாக பணியாற்றிய தொழிலாளர்களை மீட்டதற்காக, மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையம் 2017 ஆம் ஆண்டு Public Justice Champion என்ற விருது வழங்கி கௌரவித்தது.
அதன் பிறகு சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் வடிகால் வாரிய செயல் இயக்குநராக பணியாற்றிய இவர் கடந்த 16.06.2021 அன்று 18 வது கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு தொடர்பான நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்திய ஆட்சியர், நல்லாளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருது என 3 விருதுகளை முதல்வர் ஸ்டாலின் கையால் பெற்றார்.
தற்போது தலைமை செயலாளராக உள்ள நா.முருகானந்தம் கரூர் மாவட்டத்தின் 3வது ஆட்சியாக பதவி வகித்தார்.