கரூர் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை - போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம்

Karur aiadmk-district-office sudden-test
By Nandhini Feb 19, 2022 03:45 AM GMT
Report

கரூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், பரிசுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிமுக கட்சி அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் திடீரென்று அதிமுக அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டார்.

இதனால், போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி காவல்துறையிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர். உடனே காவல்துறையினர் அனைவரும் வெளியேறினர்.

இது குறித்து அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.


அந்தப் பேட்டியில் எம் ஆர் விஜயபாஸ்கர் பேசியதாவது -

பறக்கும் படை தாசில்தார் கட்சி அலுவலகத்தில் சோதனை செய்தார். முடிவில், எந்த பரிசு பொருளும் இல்லை என எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.

பிறகு, கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் வந்து மீண்டும் அலுவலகத்தில் சோதனை செய்து எங்களை மிரட்டினார்கள்.

கரூர் மாநகராட்சிக்கு 2 லட்சம் ஹாட்பாக்ஸ் மற்றும் 1,000 ரூபாய் ஆளும் திமுக கட்சி கொடுத்து வருகின்றனர். அதை எந்த தேர்தல் பறக்கும் படை பிடிக்கவில்லை. கரூர், கோவையில் பணமழை கொட்டுகிறது. அதை காவல்துறையினர் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யவில்லை.

கோவையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளை கைது செய்தனர். அதைபோலே கரூர் மாவட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களை திமுகவினர் வீடு புகுந்து மிரட்டுகின்றனர்.

அதிமுக வெற்றி பெற்றாலும், திமுக வெற்றி பெற்றதாக அறிவிப்போம். நீங்கள் செலவு செய்வது எல்லாம் வெட்டி செலவு தான் என அதிகாரிகளே வெளிப்படையாக வேட்பாளர்களிடம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.