டாப் 5 ஹீரோயின்கள் இணையும் கருங்காப்பியம்: இணையத்தில் வைரலாகும் பர்ஸ்ட் லுக்!

first look karungaapiyam
By Irumporai Jul 17, 2021 09:26 AM GMT
Report

டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள கருங்காப்பியம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்இயக்குனர் டிகே.

தற்போது இவரின் இயக்கத்தில் காட்டேரி திரைப்படம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் டிகேயின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

முழுக்க முழுக்க நாயகிகளை மையப்படுத்திய ஹாரர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு 'கருங்காப்பியம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி, ரைசா, கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி. இண்டர்நேஷன்ல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கருங்காப்பியம் படத்தை தயாரித்துள்ளன. இந்நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.