சாதிவாரிக் கணக்கெடுப்பு தான் சமூக நீதி காக்கும் - கருணாஸ்​​​​​​​ காட்டம்

Government of Tamil Nadu
By Sumathi Apr 20, 2023 12:30 PM GMT
Report

சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து மத்திய - மாநில ஆளும் கட்சிகளை கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கருணாஸ் 

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சே. கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று நான் 2016 சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 2021 வரை சட்டமன்ற அவையில் வலியுறுத்தி வந்துள்ளேன். பலரும் வலியுறுத்தினர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு தான் சமூக நீதி காக்கும் - கருணாஸ்​​​​​​​ காட்டம் | Karunas Statement About Reservation

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. குலசேகரன் தலைமையில் ஆணையம் ஒன்று 2020ஆம் ஆண்டின் இறுதியில் எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அமைக்கப்பட்டது.

 கணக்கெடுப்பு

ஆனால் அந்த ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசு காலக்கெடு விதித்தது. இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால், குலசேகரன் ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்படாததால், அது செயலிழந்தது. சென்னை உயர் நீதி மன்ற நீதியரசர்கள் தர்மாராவ், சிவஞானம் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இந்தியாமுழுவதும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று 12-5-2010 அன்று தீர்ப்பு வழங்கியது.

சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதலும் அளித்தது. அதன் பிறகு சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிராக 2012ஆம் ஆண்டு, உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணபணிக்கர், தீபக் மிஸ்ராஆகியோர் அடங்கியஅமர்வு, சென்னை உயர் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைபிறப்பித்தது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் தான், அனைத்து சமூகங்களின் கோரிக்கைகளை ஏற்று, சமூக நீதியை நிலை நிறுத்த முடியும். அனைத்து சமூக மக்களும் சம உரிமை பெற சாதிவாரி கணக்கெடுப்பு என்பது முக்கியமானது. அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதே சமூகநீதியாகும். சமூகத்தில் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் சாதியால் வழங்கப்படும் சலுகைகளை ஒழிக்க வேண்டும் என்று பல சமூகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதனுடன், பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் அடையாளம் காண வேண்டும். எல்லா சாதியினரைப் பற்றியும் துல்லியமான தகவல்களும் புள்ளி விவரங்களும் கிடைத்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே இதை அடைய முடியும். மறுபுறம், அரசின் நலத்திட்டங்களின் உண்மையான பலன்கள், இதுவரை கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற வாதமும் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இதை உறுதிப்படுத்த உதவும் ஒரே கருவி.

கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிப்பது. இந்த வேலையைச் செய்ய, நம்பகமான சாதி தொடர்பான தரவுகள் தேவை. அதை சாதிக் கணக்கெடுப்பு மட்டுமே வழங்க முடியும். சாதி கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம்., ஏனென்றால் சாதி புள்ளி விவரங்கள் வெளிவர வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு சமுதாயத்திற்கு சமூக நீதி காக்கப்படும்” என வலியுறுத்தியுள்ளார்.