திடீர் திருப்பம் - திமுகவிற்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

dmk support Karunas
By Jon Mar 08, 2021 03:59 PM GMT
Report

சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு கொடுத்திருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளித்திருப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்னர் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சமூக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என கருணாஸ் குற்றம்சுமத்தி இருந்தார்.

இதனையடுத்து, இந்த கூட்டணி உறுதியானால் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு இடம் ஒடுக்குவதற்கு திமுக முன்வரும் என்றும், உதயசூரியன் சின்னத்தில் அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கும் என்றும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.  


Gallery