எடப்பாடி பழனிசாமி நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்: கருணாஸ் ஆவேச பேச்சு
அதிமுக கூட்டணியிலிருந்து எம்எல்ஏ கருணாஸ் விலகுவதாக தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முறை முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூட்டணி வைக்க அழைப்பார்கள் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவரை அழைக்கவில்லை.
சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை என கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்தியதால் என்னை கட்சியினர் புறம்தள்ளி விட்டனர்.
எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். வன்னியர்களுக்கு தேர்தல் ஆதாயத்திற்காக இடஒதுக்கீடு கொடுத்து.மற்ற சமுதாய மக்களிடம் விரோதம் ஏற்படுத்தி கொண்டனர் அதிமுகவினர். அதே போல்முக்குலத்தோர் கோரிக்கைளை அதிமுக நிறைவேற்றவில்லை என கருணாஸ் கூறினார்.