நடிகர் கருணாஸ் கைது
actor
politician
edappadi
karunas
By Jon
தமிழக முதல்வருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருந்த எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது, அரசியல் கட்சித்தலைவர்கள் வித்தியாசமான முறையில் மக்களின் வாக்குகளை ஈர்க்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினைச் சேர்ந்த கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.