திரிஷா சர்ச்சை - மாட்டி கொண்ட பிரபலங்கள் - கமிஷனரிடம் கருணாஸ் பரபரப்பு புகார்
திரிஷா குறித்து அவதூறாக பேசப்பட்ட கருத்துக்கள் தொடர்பான விஷயங்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
திரிஷா சர்ச்சை
சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.கே.ராஜு. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு மது மற்றும் பெண்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்து கொடுத்தனர்.
கருணாஸ் புகார்
நடிகரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தான், நடிகைகளை அழைத்து வந்தார். மாட்டிக்கொண்ட பிரபலம் குறிப்பாக, நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அவதூறான கருத்துக்களையும் தெரிவித்தார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அதனை தொடர்ந்து அவதூறாக கருத்துக்களை பேசியதாக ஏ.கே.ராஜு மீது கருணாஸ் புகார் அளித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பல யூடியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசி வருவதாக தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனரிடம் கருணாஸ் புகார் செய்தார்.