சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி - 40 துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த கருணாஸ்

Tamil nadu Chennai
By Karthick Jun 02, 2024 08:03 AM GMT
Report

நடிகரும் அரசியல்வாதியமான கருணாஸ் இன்று சென்னை விமான நிலையத்தில் 40 துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கருணாஸ்

நடிகராக பிரபலமடைந்த கருணாஸ், பின்னர் தனது கவனத்தை அரசியல் பக்கம் திருப்பினார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவுடன் 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகினார்.

Karunas

அதனை தொடர்ந்து தீவிர அரசியலில் ஆர்வம் காட்டி வரும் கருணாஸ், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

தேவருக்கு இந்துத்துவ சாயம் பூசுகிறார்கள் - அதுவும் தேர்தல் நேரத்தில் - கருணாஸ்

தேவருக்கு இந்துத்துவ சாயம் பூசுகிறார்கள் - அதுவும் தேர்தல் நேரத்தில் - கருணாஸ்

40 குண்டுகள் 

இன்று திருச்சிக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார் கருணாஸ். அப்போது அவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரின் கைப்பையை சோதித்த போது, அலாரம் அடித்துள்ளது. உடனே சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Chennai Airport Karunas 40 bullets

கருணாஸ் 40 துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்துள்ளார். இது குறித்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தான் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸ் வைத்துள்ளதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுமார் 20 நிமிடங்கள் சென்னை - திருச்சி விமானம் தாமதமாகியுள்ளது.