வீட்டுக் காவலில் நடிகர் கருணாஸ்: ஏராளமான போலீசார் குவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான கருணாஸ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் நேற்றும், இன்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் அறிவித்தார். இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருணாஸை போலீசார் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
அதாவது, சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் கருணாஸ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாராம். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்களாம்.