கோலாகலமாக நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா - பங்கேற்ற முக்கிய VIP-கள்..!
சென்னை ஓமந்துாரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
ரூ 1.17 கோடி மதிப்பில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சிலை திறப்பு விழா குறித்த நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதலமைச்சர் குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அது போல் ரஜினிகாந்த், வைரமுத்து, நக்கீரன் கோபால், பத்திரிகை ஆசிரியர் கோவி லெனின், சென்னை மேயர் பிரியா உள்பட 20 மேயர்களும் பங்கேற்றனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி வேல்முருகன், வழக்கறிஞர் கண்ணதாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, நடிகர் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.