234 தொகுதிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞரே வேட்பாளர்- முக ஸ்டாலின் உருக்கம்

dmk stalin win karunanidhi
By Jon Mar 12, 2021 03:27 PM GMT
Report

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. நட்சத்திர தொகுதிகள், அதிமுக- பாஜகவுடன் நேரடியாக மோதல் என 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் களைகட்டியுள்ளது. வேட்பாளர்களை அறிவிக்கும் முன்னர், திமுக தலைவரான முக ஸ்டாலின் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டேன்.

அது வேட்பாளர் பட்டியல் மட்டுமல்ல; வெற்றியாளர் பட்டியல் என்பதை மக்களின் ஆதரவு நிரூபிக்கும்! 234 தொகுதிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞரே வேட்பாளர். களம் காண்போம்; வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.