வேட்பாளர் பட்டியலுடன் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை களம்காண்கின்றன. 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ள நிலையில் திமுக தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது.
இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவடைந்ததால் கடைசியாக தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிய உள்ளது.
முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.
இந்த முறை, புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.