உளுத்து போயிருக்கு கவனிங்க வைரலாகும் கருணாநிதியின் குறிப்பு..

viral letter karunanidhi
By Irumporai Jun 19, 2021 01:00 PM GMT
Report

கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரபுசங்கர் ஐஏஎஸ் கருணாநிதி எம் எல் ஏவாக இருந்த போது எழுதிய குறிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

அந்த குறிப்பு தற்போது வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் உள்ளது அந்த குறிப்பில் வாருங்கள் காண்போம்.

கரூர் மாவட்ட ஆட்சியர் வேங்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வுசெய்துள்ளார். அப்போது அங்குள்ள ஆய்வுக் குறிப்பேட்டைப் பார்வையிட்டார் .

அப்போது ஒரு குறிப்பு ஒன்றை எடுத்துப் பார்த்திருக்கிறார். அந்த குறிப்புதான் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது .

ஆம் ,1959ஆம் ஆண்டு அப்போதைய குளித்தலை தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த முதலமைச்சர் கருணாநிதி இப்பள்ளியை ஆய்வு செய்து அவர் கைப்பட எழுதிய குறிப்பு தான் அது.

அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்சியர் பதிவிட்டிருக்கிறார். அந்தக் குறிப்பில், மு.கருணாநிதி எம்எல்ஏ இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்பப் பாடசாலையைப் பார்வையிட்டேன்.

இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107-ல் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்தப் பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப் போயிருக்கின்றன.

ஆசிரியர்கள் நன்கு பயிற்றுவிப்பதாக பொதுமக்கள் பாராட்டினார்கள், நன்று என்று கலைஞர் கருணாநிதி தனது கைப்பட எழுதியுள்ளார் .

கரூரில் தான் முதன்முதலில் ஆட்சியராக தனது பணியை தொடங்கிய நாளில் ஒரு பொக்கிஷம் தனக்கு கிடைத்துள்ளதாக ஆட்சியர் பிரபு தெரிவித்தார்.