கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தற்கு காரணம் இது தான் - விளக்கம் கொடுத்த முதல்வர்
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோரை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய கருணாநிதி மறுப்பு தெரிவித்ததால் கருணாநிதியின் உடலையும் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் மறுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் நேற்று தேர்தல் பிரச்சார, மேற்கொண்டார். பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்.
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்ததாகவும். அதற்கு கருணாநிதி,மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது என கூறியதாகவும்காமராஜர் இறந்த போதும் கருணாநிதி இடமளிக்க மறுத்துவிட்டார்.

அதனால் தான் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அனுமதி கொடுக்க வழிவகை இல்லை எனவிளக்கம் கொடுத்தார் முதல்வர்பழனிசாமி. உண்மை இதுதான் ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தமது தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறி பிரச்சாரம் செய்து வருவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது, அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கபட்ட நிலையில் நீதிமன்றத்தை நாடி திமுக கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.