அரசு கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Minister Ponmudi Karunanidhi name Government College
By Irumporai Aug 26, 2021 07:13 AM GMT
Report

திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம்  நடைபெற்றது.

அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு 'கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி' என பெயர் மாற்றம் செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அதாவது, கலசபாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் அவர்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் பொன்முடி இந்த பெயர் மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.