கருணாநிதி தாயார் நினைவிடத்தில் பேத்தி செல்வி மலர் துாவி மரியாதை
கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் கலைஞரின் மகள் செல்வி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மனைவி மல்லிகா மாறன், சன் பவுண்டேஷன் நிறுவனர் காவேரி கலாநிதி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பேத்தி செல்வி மரியாதை
திருவாரூர் அருகே காட்டூரில் அமைந்துள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் கலைஞரின் மகள் செல்வி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மனைவி மல்லிகா மாறன், சன் பவுண்டேஷன் நிறுவனர் காவேரி கலாநிதி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக சன் பவுண்டேஷன் சார்பில் காட்டூரில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் "மணிமகுடம்" என்ற நாடகத்தை நடத்தி உருவாக்கிய காட்டூர் அரசு ஆரம்பப் பள்ளியை நூலகமாக மாற்றி புனரமைத்ததை மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன் மற்றும் கலைஞரின் மகள் செல்வி செல்வம் இணைந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து நூலகத்தை பார்வையிட்டனர்.
மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்