அதனால் தான் அங்கு அடிக்கடி செல்கிறேன் - கலைஞர் குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கம்

M K Stalin
By Sumathi Jun 08, 2023 03:57 AM GMT
Report

கலைஞர் கருணாநிதி நினைவிடம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடம் 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி பெரம்பூரில் உள்ள பின்னி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி கால்படாத இடமில்லை;

அதனால் தான் அங்கு அடிக்கடி செல்கிறேன் - கலைஞர் குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கம் | Karunanidhi Memorial Opened On August 7 Stalin

அவர் சந்திக்காத மனிதர்கள் இல்லை; தொடங்காத திட்டம் இல்லை ;உருகாத உடன்பிறப்புகள் இல்லை; இப்படி ஊர் தோறும், நகர்தோறும், கிராமம்தோறும் விழா எடுக்க தொடங்கினால் நூற்றாண்டு விழாவையே பத்தாண்டுகளுக்கு நாம் கொண்டாட வேண்டியது வரும்.

ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டு தலைவர்கள் பெயரால் நினைவு சின்னங்களையும் உருவாக்கிய கலைஞர் பெயரால் சின்னங்கள் மாதம் தோறும் திறக்கப்பட இருக்கின்றன. எந்த நிகழ்ச்சிகளுக்கு போனாலும், எந்த திட்டங்களை தீட்டினாலும், எந்த விழாக்களில் பங்கெடுத்தாலும்,

எந்த நிலைப்பாடுகளை எடுத்தாலும் கலைஞர் என்னை மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணத்தோடுதான் இருக்கிறேன் அதனால் தான் அடிக்கடி கடற்கரைக்கு சென்று அவர் நினைவகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறக்கப்பட உள்ளது. 365 நாளும் கலைஞரை கொண்டாட இருக்கிறோம். இந்த கொண்டாட்டங்களில் மூலமாக கலைஞர் கருணாநிதிக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழை சேர்க்க போகிறோம் என்பதல்ல . நம் நன்றியின் அடையாளமாக இதனை கொண்டாட போகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.