பிரம்மாண்ட பேனா.. உதயசூரியன் வடிவத்தில் கருணாநிதி நினைவிடம்: வெளியானது மாதிரி வரைபடம்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடம் வெளியாகியுள்ளது. திமுக முன்னாள் தலைவரும், த முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் இதனை இன்று அறிவித்தார். இந்த நிலையில், கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடம் வெளியாகியுள்ளது.
இதனை முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்றுள்ளன.
எழுத்தால் கலையுலகை ஆண்டு - கொண்ட கொள்கையால் அரசியல் வானில் ஒளிர்ந்த சூரியன் 'தமிழினத் தலைவர்' கலைஞர் நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்! pic.twitter.com/XCLNOXmdFY
— M.K.Stalin (@mkstalin) August 24, 2021
இதுகுறித்த தன் ட்விட்டர் பதிவில், எழுத்தால் கலையுலகை ஆண்டு - கொண்ட கொள்கையால் அரசியல் வானில் ஒளிர்ந்த சூரியன் 'தமிழினத் தலைவர்' கருணாநிதி நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்!" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.