கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவுதினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பாக இன்று அமைதி பேரணி நடத்தப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றுவருகிறது.
2018 ஆகஸ்ட் 7ம் தேதி காவிரி மருத்துவமனையில் காலமான இவரின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திருவாரூரில் கருணாநிதி இல்லம் மலர்களால் இதய வடிவில் அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க அவரின் சிலைக்கும், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது , சென்னையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியும் அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்த பேரணியானது ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கலைஞரின் நினைவிடம் வரை நடைபெறுகிறது.
#LIVE: முத்தமிழறிஞர் கலைஞர் நினைவுநாள் அமைதிப் பேரணி https://t.co/hMkjkR7l4N
— M.K.Stalin (@mkstalin) August 7, 2022