கடல்ல பேனா வச்சா உடைப்பேன்; கொந்தளித்த சீமான் - ஆணையம் ஆலோசனை!
பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்ட பணிகள் குறித்து இன்று விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
பேனா சின்னம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது.. ஆனால், தமிழக அரசு எடுத்த இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம்பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 31ல் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது.
இதன் அடிப்படையில், விரிவான அறிக்கையை பொதுப்பணித்துறை தயாரித்திருக்கிறது. இந்நிலையில், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணைய கூட்டம், சென்னையில் இன்று நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசும்போது,
ஆணையம் ஆலோசனை
திமுகவினர் அவரை பேச்சை நிறுத்தும்படி கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேணும்னா, அறிவாலயத்தில் போய் வையுங்கள்.
நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்ளதான் வைப்பாங்களாம். தனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன். பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது?
நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி" எனத் தெரிவித்துள்ளார்.