கருணாநிதி போல தான் நானும் முதல்வர் ஆனேன் - முதல்வர் பழனிசாமி பெருமிதம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல திமுக தலைவர் ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்திய கருத்து கணிப்புகளும் திமுக கூட்டணிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் எனத் தெரிவித்திருக்கின்றன. திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது எனத் தொடர்ந்து விமர்சித்து வந்த எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு திறமை இல்லாததால் தான் கலைஞர் கட்சியின் தலைமை பொறுப்பை வழங்கவில்லை எனக் கூறியிருந்தார்.
சமீபத்திய தேர்தல் பரப்புரையில் பேசிய முதலவர் பழனிசாமி, ”அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரானது போலவே ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்” என்று பேசியுள்ளார்.