“உதயநிதி மகன் வந்தாலும் வாழ்கனு தான் சொல்லுவோம்” : அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடியதா என கேள்வி எழுப்பினார்.
வாரிசு அரசியல் அல்ல
மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது, வாரிசு அரசியல் அல்ல என்றும் தெரிவித்தார்.
திமுகவை கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுவோம்.

உதயநிதி மகனுக்கும் வாழ்க சொல்லுவோம்
அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் வேறு யாருக்கு விசுவாசமாக இருப்போம். உதயநிதி ஸ்டாலின் இல்லை அவர் மகன் வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம் எனக் கூறியுள்ளார்.
திமுகவில் கடந்த சில நாட்களாக வாரிசு அரசியல் இருந்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன, மதுரையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பதவி வெறிக்காக சிலர் மதத்தில் அரசியல் செய்வதாகவும், சிலர் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டை ஆள நினைப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.