விஜய்யின் தவெக கட்சியில் இணையும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்... யார்னு தெரியுமா?

Tamil nadu
By Manchu May 22, 2026 01:25 PM GMT
Report

முதல்வர் விஜய்யின் தவெக கட்சிக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து நேரடியாக நபர் ஒருவர் ஆதரவு கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல்

தமிழகத்தில் இதுவரை 74 ஆண்டுகால அரசியலில், 15 ஆ்ணடுகள் காங்கிரஸ் கட்சியும், 59 ஆண்டுகள் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்திருந்தது.

இந்நிலையில் 2026ம் ஆண்டு நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில் , புதிய கட்சியாக தவெக முத்திரை பதித்ததுடன், முதலமைச்சர் பதவிக்கு விஜய் அமரவும் செய்துள்ளார்.

முதல்வராக விஜய் பதவியேற்கும் போது 12 அமைச்சர்கள் அவருடன் பதவியேற்ற நிலையில், அவ்விழாவில் திமுக கட்சியின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கலந்து கொண்டார்.

விஜய்யின் தவெக கட்சியில் இணையும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்... யார்னு தெரியுமா? | Karunanidhi Family Member Join Tvk

தவெக-வில் இணைகிறாரா கயல்விழி அழகிரி

கருணாநிதி குடும்பத்திலிருந்து ஒருவர் இவ்வாறு வந்துள்ளது, பரபரப்பாக பேசப்பட்டதுடன், விரைவில் அவர் தவெக கட்சியில் இணையப்போவதாகவும் கூறப்பட்டது.

மதுரை மு.க.அழகிரியின் கோட்டையாக விளங்கிய நிலையில், தற்போது அரசியலை விட்டே ஒதுங்கி இருக்கும் நிலையில், அவரது மகன் கயல்விழி தவெக-வுடன் இணைவதாக திட்டமிடுள்ளாராம்.

உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு கயல்விழி இவ்வாறான முடிவை எடுத்திருப்பதாகவும், அதிலும் மதுரை மேயர் பதவியினை பெறுவதற்கு இவ்வாறு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகின்றது.

விஜய்யின் தவெக கட்சியில் இணையும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்... யார்னு தெரியுமா? | Karunanidhi Family Member Join Tvk