கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவிப்பு

DMK Train Crash Odisha
By Irumporai Jun 03, 2023 01:54 AM GMT
Report

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

கலைஞர் பிறந்த நாள் விழா  

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட இருந்தது. ஒடிஷா ரயில் விபத்து காரணமாக தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவிப்பு | Karunanidhi Birthday Public Meeting Cancelled

  பொதுக்கூட்டம் ரத்து

அதாவது, செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் நிகழ்ச்சி ரத்து எனவும், சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை ஆகிய 2 நிகழ்ச்சிகள் மட்டுமே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.