இதனால் தான் தமிழா தமிழாவில் இருந்து விலகினேன் - ரகசியம் உடைத்த கரு. பழனியப்பன்

Sumathi
in பிரபலங்கள்Report this article
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விலகியது குறித்து கரு. பழனியப்பன் விளக்கமளித்துள்ளார்.
தமிழா தமிழா
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ்புல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கரு. பழனியப்பன். அதைத் தொடர்ந்து, துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம் என சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கரு. பழனியப்பன் விளக்கம்
மேலும், ஜீ தமிழில் தொடங்கப்பட்ட தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நல்ல வரவேற்பு இருந்த நிலையில் திடீரென விலகுவதாக அறிவித்தார். அந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது. அந்த நிகழ்ச்சியை பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பழனியப்பன் நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார். எனக்கும் சேனல் தரப்பினருக்கும் ஒரு இடத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டது. ஒன்று நான் விட்டுக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஆனால் ஒருவரே எப்போதும் விட்டுக்கொடுத்து கொண்டு இருக்க முடியாது. அந்த இடத்தில் அங்கே சமனான நிலை ஏற்படவில்லை. அதனால் நான் விலகினேன். இப்போதும் தமிழா தமிழா நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நிகழ்ச்சி நல்லபடியாக தான் போய்க்கொண்டிருக்கிறது.
இப்போதைய ஜெனரேஷன் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடைய அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.