ஜூன் 3 ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை

Karti Chidambaram
By Petchi Avudaiappan May 30, 2022 11:42 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை விசா முறைகேடு வழக்கில்  ஜூன் 3-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் வாங்கிக் கொண்டு 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்த நிலையில் அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. 

இதன்பின்  கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்க கோரி முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்தி சிதம்பரத்தை ஜூன் 3-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ஜூன் 3 ஆம் தேதி அவரது மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.