ஆரோக்கியமான அரசியலுக்கு தனிமனித விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது'’ - கார்த்திக்சிதம்பரம் கருத்து
ஆரோக்கியமான அரசியலுக்குத் தனிமனித விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லதுஎன சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வாக்கர்ஸ் கிளப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு கார்த்தி சிதம்பரம் இன்று வாக்குச் சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம் கருத்துக்கணிப்பை முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஆனால், எல்லாக் கருத்துக்கணிப்புகளும் ஒரே மாதிரியாக முடிவுகளைச் சொல்வதால் அந்த திசையை நோக்கி தேர்தல் செல்கிறது என கூறினார்.

மேலும் தனிநபர் செய்யும் அராஜக நடவடிக்கைகளுக்குக் கட்சிப் பொறுப்பை ஏற்க முடியாது. ஆரோக்கியமான அரசியலுக்கு தனிமனித விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. திமுக தலைமை இதுகுறித்து விளக்கம் கொடுத்துவிட்டது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.