அதிமுகவை சசிகலா நிச்சயம் கைப்பற்றுவார் - கார்த்திக் சிதம்பரம்
அதிமுக கட்சி சசிகலா கையில் தான் சேரப்போகிறது என காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "நான் ஒரு வருடமாக கூறியது போல் அதிமுக கட்சி சசிகலாவின் கையில்தான் சேரப்போகிறது.

இதை, அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வார்கள்; ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சீமானுக்கு கிடைக்கிற வாக்கு நிரந்தர வாக்கு கிடையாது.
சீமான், ஒரு சிலர் உணர்வுகளை தூண்டி தற்காலிகமாக வாக்குகளைப் பெறுகிறார். மேலும், ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள், மறு தேர்தலில் சீமானுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
அவர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அடுத்த தேர்தலின்போது கட்சியில் இருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் பாஜக ஒரு நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சி.
அவர்களது ஹிந்தி, இந்துத்துவா கொள்கைகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" எனத் கருத்து தெரிவித்துள்ளார்