கார்த்தி சிதம்பரம் வீட்டில் உணவருந்திய கனிமொழி: வைரலாகும் புகைப்படம்
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் காரைக்குடி உணவை ரசித்து சாப்பிடும் கனிமொழியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மக்களை ஈர்க்க ஒவ்வொரு வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, தயாநிதி மாறன் எம்பி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சினிமா பிரபலங்கள் பலரும் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குடி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பெரியகருப்பன், சிவகங்கை சட்டமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன் உள்ளிட்டோரை ஆதரித்து திமுக எம்.பி.கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் வீட்டுக்கு சென்ற கனிமொழி காரைக்குடி உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தொண்டர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
DMK + Congress #Kanimozhi #KartiChidambaram pic.twitter.com/vJOY9eOVjh
— Priya Gurunathan (@priyaGurunathan) March 31, 2021