கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை - நீதி மன்றம் உத்தரவு

By Irumporai May 26, 2022 10:00 AM GMT
Report

201 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதாக பதியப்பட்ட வழக்கில் கடந்த 18-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.

தனியார் மின் நிலையத்தில் பணியாற்ற 250-க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக பாஸ்கர ராமன் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யபட்டது.

சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை -  நீதி மன்றம் உத்தரவு | Karti Chidambaram Gets 3 Days Relief In Visa Case

இதற்கிடையில், அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள பணமோசடி வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சிபிஐ சிறப்பு கோர்ட்டு, அமலாக்கத்துறை பதிந்துள்ள பணமோசடி வழக்கில் வரும் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு மீண்டும் வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வரும் எனவும் சிபிஐ சிறபு கோர்ட்டு நீதிபதி நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.