திமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும்: கார்த்தி சிதம்பரம் பளீச் பதில்
ட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளன. அதற்கான பணிகளில் பல்வேறு கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி பற்றி கார்த்திக் சிதம்பரத்திடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகள் மற்றும் பதில்கள் பின் வருமாறு, ஏசியில் இருப்பவருக்கு என்ன தெரியும் என ஸ்டாலின் பற்றி முதல்வர் விமர்சனம் செய்தது குறித்து? தீவிரமான அரசியல் மேடையில் பேச வேண்டிய பேச்சு இது அல்ல.
10 ஆண்டுகளில் அதிமுக என்ன செய்தது அவர்களது முதலாளியான பாஜக 7 ஆண்டுகளில் என்ன செய்தது என்று பேச வேண்டுமே தவிர வெயில் காலத்தில் ஏசி போட்டார் செருப்பு போட்டு நடக்கிறார் என்பதெல்லாம் வேடிக்கையாக உள்ளது. இது அதிமுகவின் கேலிக்கூத்தான விமர்சனம். இதனை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழக அரசின் கடன் சுமை குறித்து? இன்று கடன் சுமை இருக்கிறது என்றால் அதற்கு காரணம் 10 ஆண்டுகளில் ஆட்சி செய்த அதிமுக தான்.
வருங்காலத்தில் நிதி நீட்டிப்பு என்பதை வருங்காலத்தில் வரும் அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இதில் திமுகவை குறை கூறுவதில் எந்த விதத்தில் நியாயம் உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்து? பாராளுமன்ற தேர்தலில் எப்படி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றோமா அதேபோன்று சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறுவோம்.
மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் அந்த ஆட்சி மாற்றம் நிச்சயமாக வரும்.
சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா?
அதனை இப்பொழுது கூற இயலாது. பெரும்பான்மையான சீட்டுகளை திராவிட முன்னேற்றக் கழகம் பெறும் பட்சத்தில் அவர்கள் தனித்துதான் ஆட்சி அமைப்பார்கள்.